திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருவதால் வனவிலங்களும் , அரிய வகை மூலிகை செடிகளும், மரங்களும் அழிந்து வருகிறது.
இதனிடையே வனப்பகுதியை காப்பாற்ற வேண்டுமெனவும், வனப்பகுதியில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்கவும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. மேலும் வனப்பகுதிக்குள் செல்லும் போது புகைப்பிடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.