மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அருகே சுமார் 30 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது பேரிஜம் ஏரி. இந்த ஏரி முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள தொப்பிதூக்கிபாறை, அமைதி பள்ளத்தாக்கு, மதிகெட்டான்சோலை உள்ளிட்ட அமைதியான இயற்கை சூழலை அனுபவிக்கவும், வனவிலங்குகளை பார்வையிட விரும்பியும் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டிவருவது உண்டு.
இந்த இடத்திற்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் மூலம் முன் அனுமதி பெற்று, நுழைவு கட்டணம் செலுத்தி செல்லவேண்டும். இந்நிலையில் பேரிஜம் பகுதியில் உள்ள சாலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் மிகவும் சேதமடைந்துள்ளன.
இதனால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனையடுத்து பேரிஜம் ஏரிக்கு செல்லும் சாலையை சரி செய்திட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
விரைவில் பணிகள் முடிந்தவுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தக்காளின்னு ஒரு ஊரா?' - பயணிக்கு அதிர்ச்சி கொடுத்த அரசுப் போக்குவரத்துக் கழகம்