ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திண்டுக்கல்லில் வாரம் இரண்டு நாள்கள் இறைச்சி பிரியர்களுக்காக இறைச்சி கடைகள் மூன்று இடங்களில் மாநகராட்சியால் உரிய அனுமதியோடு நடத்தப்பட்டுவருகின்றன. இங்கு, ஆடு, கோழி, மீன் போன்றவற்றின் இறைச்சி சுகாதாரமான முறையில் விற்பனைசெய்யப்படுகிறது. ஆனால், மாட்டு இறைச்சி விற்பனை செய்ய அனுமதி கிடையாது.
இந்நிலையில், மாநகராட்சி அறிவித்த இடத்தை தவிர, மற்ற இடங்களில் இறைச்சிக்கடைகள் நடத்த ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தடையை மீறி பல்வேறு இடங்களில் மாடு, ஆடு, கோழி இறைச்சிக் கடைகள் செயல்பட்டன.
அதேபோல, தடையை மீறி மாட்டு இறைச்சி விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் தலைமையில், உணவுப் பாதுகாப்புத் துறை, மாநகராட்சி அலுவலர்கள் இணைந்து மாநகராட்சி பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் அனுமதி பெறாமல் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யவைத்திருந்த சுமார் 500 கிலோவிற்கு அதிகமான இறைச்சிகளைப் பறிமுதல்செய்து அழித்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் சேவையை தொடங்க தயாராகும் தென்னக ரயில்வே...!