ETV Bharat / state

திண்டுக்கல் மீன் சந்தையில் அதிகாரிகள் திடீர் சோதனை; அதிர வைக்கும் தகவல்! - Dindigul District Collector Poongodi

திண்டுக்கல் மீன் சந்தையில் மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்ற பொழுது வியாபாரிகள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

திண்டுக்கல் மீன் சந்தையில் மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

author img

By

Published : Aug 6, 2023, 1:15 PM IST

திண்டுக்கல் மீன் சந்தையில் மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவின் பெயரில் சின்னாளபட்டி பகுதியில் மீன் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடம் இன்று அதிகாலை மீன்வளத்துறை மற்றும் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அழுகிய மீன்கள் மேலும் கெட்டுப் போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் ரசாயன மருந்துகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அதிகாரிகள் அந்த மீன் வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வியாபாரிகள் திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதிக்கு அருகே உள்ள மீன் சந்தையில் மீனை வாங்கியதாகக் கூறி உள்ளனர். இதை அடுத்து மீன் சந்தைக்கு வந்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் உள்ள மீன்களை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

ஆனால், மீன் வியாபாரிகள் அதிகாரிகளை சோதனை செய்யவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, “நீங்கள் கொண்டுவந்த மருந்தை நாங்கள் சோதனை செய்து தருகிறோம்” என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். அதற்கு அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்து, ஒரு சில மீன்களில் அந்த மருந்துகளை ஊற்றி உள்ளனர்.

இதனை அடுத்து மீன்கள் அனைத்தும் சிவப்பு நிறமாக மாறியது. உடனடியாக வியாபாரிகள், அதிகாரிகள் வைத்திருந்த மருந்தை வாங்கி உயிருள்ள மீன்களில் ஊற்றியுள்ளனர். அந்த மீன்களும் சிவப்பு நிறமாக மாறியது. இதனால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே தங்கள் மீது புகார் கூறுகின்றனர் என்று மீன் வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் கூறும் பொழுது “கெட்டுப்போன மீன்களில் மருந்தை ஊற்றினால் கண்டிப்பாக தெரிந்து விடும். அதேபோல் இவர்கள் அதிகாலையில் இருந்து இந்த மீன்களை கையாண்டு வருகின்றனர். அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மீன்கள் ஐஸ் பெட்டியில் அடைக்கப்பட்டு ரசாயன மருந்துகள் மூலம் தான் திண்டுக்கல் சந்தைக்கு வருகிறது. அதையும் இவர்கள் கையால் பயன்படுத்தி இருப்பார்கள்.

இதன் காரணமாக உயிர் உள்ள மீன்களில் மருந்தை ஊற்றிய பொழுது சிவப்பு நிறமாக வருகிறது. நாங்கள் நேரடியாக சோதனை செய்தால் மீன் சந்தையில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அதே போல் நாங்கள் காவல்துறை அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு செல்லவில்லை. மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் தற்போது ஆய்வு செய்ய வந்த போது திண்டுக்கல் மீன் சந்தை வியாபாரிகள் எங்களை அனுமதிக்கவில்லை” என்று கூறினர். இந்த நிகழ்வு மீன் வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஒரே பைக்கில் பயணம் செய்த 5 மாணவர்கள்; இம்போசிஷன் எழுத சொல்லி நூதன தண்டனை அளித்த போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.