ETV Bharat / state

திண்டுக்கல்லில் பட்டாசு குடோனில் வெடி விபத்து.. பெண் உயிரிழப்பு.. உரிமையாரை தேடும் பணி தீவிரம்... - இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் கணவன், மனைவி இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 18, 2023, 6:37 AM IST

திண்டுக்கல் அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா செம்பட்டி - வத்தலகுண்டு சாலையில் இந்து முன்னணி அமைப்பின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஜெயராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று (ஜன.17) வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜெயராம் மற்றும் அவரது மனைவி நாகராணி இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல், ஆத்தூர், வத்தலகுண்டு, நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவயிடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து மாலை 5 மணி அளவில் நடந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக செம்பட்டி காவல்துறையினருக்கும், ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். முதலில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

அதன்பின் திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து தீயணைப்புத்துறை வீரர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மேலே உள்ள கட்டடம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

பல மணி நேரப்போராட்டத்துக்கு பின் நாகராணியின் உடல் மீட்கப்பட்டது. இந்த உடலை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயராமை தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த மீட்பு பணியில் நான்கு ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகவும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த வீரர் அபிசித்தருக்கு கார் பரிசு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.