திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் தனியார் மற்றும் வனப்பகுதிகளில் மரங்கள் மற்றும் செடி கொடிகள் வாடி கருகி காணப்படுகின்றன. இந்த வெயிலின் தாக்கம் காரணமாக சமூக விரோதிகள் சிலர் கொடைக்கானல் மற்றும் பல்வேறு பகுதிகளில் தீயை பற்ற வைத்து விடுகின்றனர்.
இந்நிலையில் வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதி அருகே தேன்பண்ணை பகுதியில் தனியார் இடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், வனப்பகுதிக்குள் தீ பரவி வருகிறது. இதனால் வன விலங்குகள் சாலைகளில் உலா வருகின்றன.
இதையும் படிங்க: ஜோதிடத்தின் நம்பிக்கையால் 5 வயது மகனை கொன்ற தந்தை!