திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவர் வேடசந்தூர் அருகே உள்ள விவசாய நிலங்களில் இருக்கும் தனது கால்நடைகளுக்கு தீவனமான சோளத் தட்டைகளை, புளிய மரத்துகோட்டையில் இருந்து தனது நண்பர் சரவண குமாரின் மினி லாரியில் ஏற்றி வந்துள்ளார்.
இதற்கிடையில் சாலையின் நடுவே மின் கம்பங்களின் வயர்கள் தாழ்வாக இருந்ததால், சோளத் தட்டைகள் வயரில் உரசி தீ பற்றி எரிந்தது. சாலை நடுவே நின்று லாரி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தால் பெரும் விபத்து ஏற்படும் என கருதி, சாலையின் ஓரமாக வாகனத்தை தள்ளி விட ஜேசுதாஸ் முயற்சித்த போது, அருகிலிருந்த முத்துச்சாமியின் தோட்டத்தில் லாரி கவிழ்ந்தது.
உடனே ஜேசுதாஸ், வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அத்தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கால்நடைகளின் தீவனம் ஏற்றி லாரி உள்பட சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.
இதையும் படிங்க: பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள்!