ETV Bharat / state

மல்டி வெள்ளரிக்காய் விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டும் விவசாயிகள்

குறுகிய காலத்தில் நவீன முறையில் அதிக இலாபம் தரும் மல்டி வெள்ளரிக்காய் விவசாயம் செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆய்வு  மல்டி வெள்ளரிக்காய் விவசாயம்  விவசாயிகள் ஆர்வம்  திண்டுக்கல் மல்டி வெள்ளரிக்காய் விவசாயம்  திண்டுக்கல் செய்திகள்  dindigul news  dindigul latest news  Farmers interested in multi-cucumber farming  multi-cucumber farming  Farmers interested in multi-cucumber farming in dindigul
மல்டி வெள்ளரிக்காய் விவசாயம்
author img

By

Published : Jul 3, 2021, 7:12 PM IST

திண்டுக்கல்: நிலக்கோட்டைத் தாலுகா பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பாக, நவீன விவசாய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பசுமைக்குடில் அமைத்து மல்டி வெள்ளரிக்காய் எனப்படும் குறுகிய காலப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதனை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பெருமாளும், சில அலுவலர்களும் அவ்விடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

வேளாண்துறை, தோட்டக்கலைத்துறையின் உதவி

மாவட்டத்தில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் பல்வேறு திட்டத்தின் கீழ் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, பல மானியக் கடன் உதவி செய்து வருகின்றனர்.

மேலும் பசுமைக்குடில் செட் அமைத்தல், விதைகள் தேர்வு செய்து கொடுத்தல், பராமரிப்பு முறை பயிற்சி கொடுத்தல் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர். இதன் வாயிலாக மூன்றே மாதத்தில் அதிக மகசூல் கிடைக்கும் வகையில், மல்டி வெள்ளரிக்காய் சாகுபடியை அதிகப்படுத்தியுள்ளனர்.

அலுவலர்கள் நேரடி ஆய்வு

கிடைக்கும் வருவாய்

இதன் மூலம் 3 ஏக்கரில் கிடைக்கும் வருமானம், 25 சென்ட் நிலத்தில் கிடைக்கின்றது. இந்த மல்டிவெள்ளரிக்காய் சராசரியாகக் கிலோ 40க்கு விலைபோகிறது. ஒருமுறை அறுவடைக்கே 4 டன் வரை மகசூல் கிடைக்கின்றது.

மேலும் ஒருமுறை சாகுபடிக்கு 12 முதல் 14 முறை அறுவடை செய்யலாம் எனவும்; 20 முதல் 22 டன்வரை மகசூல் கிடைக்கிறது எனவும்; ஒரு முறைக்கே 4 லட்சம் வரை வருமானம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த மல்டி வெள்ளரிக்காய் சாகுபடியை நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில் அதிகளவிலான விவசாயிகள், அரசு உதவி பெற்று, ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.

இதில் 10 -க்கு மேற்பட்ட பசுமைக்குடிலில் பயிர்செய்யப்பட்ட மல்டி வெள்ளரிக்காய்களை வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பின் இது குறித்து விவசாயிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினர்.

இதையும் படிங்க: தனியார் நூல் மில்லில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.