திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், வத்தலகுண்டு, பழனி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரம் அமைக்கப்பட்டு மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த உயர்மின்னழுத்த கோபுரம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர்களுக்கு வாடகையாக சொற்ப தொகை கொடுத்து ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதனைக்கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அச்சங்கத்தின் உறுப்பினர் பெருமாள் பேசுகையில், நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைத்த காரணத்தால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே மின்கோபுரம் அமைக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்கு மாதவாடகை தொகையாக 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தென்னையில் பரவும் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்' - தடுக்க வேளாண் விஞ்ஞானிகள் செயல்விளக்கம்!