ETV Bharat / state

கொடைக்கானலில் களைகட்டும் கலப்பட யூகலிப்டஸ் ஆயில்... தோல் நோய் பரவும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை

திண்டுக்கல்: கொடைக்கானலில் தயாரிக்கப்படும் யூகலிப்டஸ் ஆயிலுக்கு நல்ல கிராக்கி இருந்தும், அவற்றில் கலப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கலப்படமுள்ள யூகலிப்டஸ் தைலத்தை பயன்படுத்துவதால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

யூகலிப்டஸ்
யூகலிப்டஸ்
author img

By

Published : Nov 9, 2020, 9:40 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகமாக யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. கொடைக்கானலில் குடிசைத் தொழிலாக யூகலிப்டஸ் தைலம் தயாரிக்கும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆயில் தலைவலி, மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு உடல் வலிகளுக்கு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. நாள்தோறும் தினசரி 100 லிட்டர் ஆயில் தயார் செய்வதே சிரமம்தான்.

யூகலிப்டஸ் ஆயில் தயாரிக்கும் முறை

யூகலிப்டஸ் மரத்திலிருந்து உதிரும் இலைகளை சேமித்து வைத்து பெரிய கொதிகலன் மூலம் யூகலிப்டஸ் ஆயிலை தயாரித்து வருகின்றனர். சுமார் 400 கிலோ இலைகள் பிடிக்கும் ஒரு தொட்டியினுள் இலைகளை நிரப்பி காற்று புகாமல் மூடி வைக்கப்படும். தொட்டியின் அடிப்பகுதியில் தீயிட்டு இலைகள் வேகவைக்கப்படுகிறது. தொட்டியிலிருந்து வரக்கூடிய ஆவியானது ஒரு குழாய் மூலம் மற்றொரு தொட்டிக்கு செல்கிறது.

அவ்வாறு செல்லக்கூடிய ஆவி அதிக வெப்பமாக இருப்பதால் இன்னொரு குழாய் மூலம் குளிர்ந்த நீரையும் சேர்த்து சிறிய தொட்டிக்கு செல்கிறது. இறுதியாக நீரின் கடின தன்மை காரணமாக நீர் மட்டும் அடிப்பகுதியில் தேங்கி நிற்கும். அதே நேரம் யூகலிப்டஸ் இலையின் ஆவி நீரானது மேல்பகுதியில் நின்று அந்த ஆவி நீர் மட்டும் தனியாக யூகலிப்டஸ் தைலமாக பிரிக்கப்படுகிறது.

ஆயிலில் கலப்படம்

கொடைக்கானலில் தயாரிக்கப்படும் யூகலிப்டஸ் ஆயிலுக்கு நல்ல கிராக்கி இருந்தாலும், அவற்றில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யூகலிப்டஸ் ஆயில் என்ற பெயரில் கேம்பர் என்னும் வெள்ளை நிற ஆயிலை கலப்படம் செய்து ஏமாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும், பாட்டில்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிக்கப்படும் பார்முலா, எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றிய எந்த அறிவிப்புமே இல்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

யூகலிப்டஸ்  இலைகள்
யூகலிப்டஸ் இலைகள்

இது குறித்து கொடைக்கானல் பொது நலமருத்துவர் பாலசுப்பிரமணி கூறுகையில், "லாப நோக்குடன் யூகலிப்டஸ் ஆயிலில் கேம்பர், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆயிலை பயன்படுத்தும்போது அலர்ஜி, ஒவ்வாமை, தோல் நோய், கொப்பளங்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. கலப்படம் செய்யப்பட்ட ஆயில் நரம்பு மண்டலத்தை தாக்கும். மூச்சுத் திணறல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குழந்தைளுக்கு இந்த ஆயிலை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது" என்றார்.

இதையும் படிங்க: தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தை மாற்றியமைக்க எம்.எல்.ஏ கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.