ETV Bharat / state

திண்டுக்கல்லில் திடீர் அமலாக்கத்துறை சோதனை... தொழிலதிபர்கள் வீடுகளில் ரெய்டு!

திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன்வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 11:42 AM IST

திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்.12) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில், திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் ரத்தினம். பிரபல தொழில் அதிபரான இவர் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மேலும், தமிழகம் முழுவதும் மணல் அள்ளுதல், சில்லறை விற்பனை செய்தல், மணல் குவாரி, ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டி விற்கும் தொழிலும் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். வருமானவரித் துறையினர் சோதனை மேற்க்கொள்ளும் பகுதிகளில் CRPF வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஏ.ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறியது என்ன? பதில் கூற மறுத்த காவல் ஆணையர்?

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பு இழப்பீடு செய்த போது தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்ததாக கூறி ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்து றையின சோதனை நடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து, ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வசித்து வரும் திண்டுக்கல் ஹனிபா நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கேயும் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கோவிந்தனுக்கு சொந்தமாக மூன்று பெட்ரோல் பங்குகள், மணல் குவாரி, ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருவருக்கும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாணவிகள் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.