ETV Bharat / state

20 வருடங்களாக மின்சாரம் இல்லை: இருளில் இருந்து விடுவிக்க ஆட்சியரிடம் கோரிக்கை

அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில், கடந்த 20 ஆண்டுகளாக மின்சார இணைப்பு அளிக்கப்படாமல் இருப்பதால், அந்த வீட்டில் வசிக்கும் மூன்று பள்ளி மாணவிகள் இருட்டில் கல்வி கற்று வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

20 years no electricity in house at Dindigul

author img

By

Published : Dec 21, 2021, 8:52 AM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு, காளீஸ்வரி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இவர்களுக்கு, கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் சார்பில் தொகுப்பு வீடு வழங்கப்பட்டது. ஆனால் வீட்டிற்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி எதுவும் செய்து தரப்படவில்லை.

இருளில் கல்வி கற்கும் அவலம்

இதுகுறித்து முனியப்பன் பலமுறை மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களது மூன்று குழந்தைகளும் மண்ணெண்ணெய் விளக்கின் மூலம் வீட்டில் பாடம் படித்து வருகின்றனர்.

மேலும் தம்பதியின் மூத்த மகள் இந்திராணி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மாவட்ட ஆட்சியர் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட முனியப்பன், அவரின் மூன்று மகள்கள் உள்பட குடும்பத்தினர் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அறிவுரைக் குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.