ETV Bharat / state

நடுவழியில் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... பெண் அலறியடித்து ஓட்டம் - எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

வேடசந்தூர் அருகே பெண் ஓட்டிச்சென்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நடுவழியில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... பெண் அலறியடித்து ஓட்டம்

author img

By

Published : Aug 19, 2022, 9:11 PM IST

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 33). இவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே அவர் தனது எலக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டரில் திண்டுக்கல் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தார்.

திருச்சி முதல் திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே அய்யலூர் மேம்பாலத்தில் ஸ்கூட்டர் சென்றுகொண்டிருந்த பொழுது, திடீரென பேட்டரி பகுதியிலிருந்து புகையுடன் நெருப்புக்கிளம்பியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அருள்ஜோதி ஸ்கூட்டரை விட்டு இறங்கி ஓடிவிட்டார்.

தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... பெண் அலறியடித்து ஓட்டம்

சற்றுநேரத்தில் ஸ்கூட்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்து சாம்பல் ஆனது. ஸ்கூட்டரில் நெருப்பு பற்றிய உடன் சுதாரித்துக்கொண்டு உடனடியாக ஸ்கூட்டரை விட்டு இறங்கியதால் பெரும் தீ விபத்தில் இருந்து அருள்ஜோதி உயிர் தப்பினார். இந்தச்சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சாலையில் சாக்கடை கழிவுகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.