திண்டுக்கல்: பழனி சத்யா நகரில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதியவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் தற்போது முதியவருக்கு கறுப்பு பூஞ்சை நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பழனியில் முதல்முறையாக, முதியவர் ஒருவர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 6-8 வாரங்களில் மூன்றாவது அலை!