ETV Bharat / state

அமலாக்கத்துறையின் அடுத்தகுறி...செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் வீட்டில் ரெய்டு! - dindigul South Union Secretary Veera Saminathan

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவிலுள்ள திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் வீரா.சாமிநாதனுக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையிட்டனர்.

திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

author img

By

Published : Aug 2, 2023, 6:01 PM IST

திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல்:தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களை குறிவைத்து சோதனையில் இறங்கும் அமலாக்கத்துறை. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றத்திற்கான ஆவணங்களை கைப்பற்றியதாகத் தெரிவித்த அமலாக்கத்துறை, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சியங்களை வலுப்படுத்த அவரின் சுற்றுவட்டாரங்களில் சோதனையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர், வீரா. சாமிநாதன். இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமியாக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களிலில் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டுமின்றி வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் மற்றும் பழனியில் தனியாக சிபிஎஸ்சி பள்ளியும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் கைதுக்குப் பின்னர், அவரது ஆதரவாளர் என்று சந்தேகத்துக்கு உட்பட்டு, இவரது வீட்டில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு.. பிரதமர் மணிப்பூர் செல்ல வலியுறுத்தல்!

குறிப்பாக வீரா. சாமிநாதன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமியாக செயல்பட்டு வந்தார் என புகார் எழுந்த நிலையில் அதன் அடிப்படையில் தற்போது அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் மூலம் வசூலான பணத்தை, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொடுத்ததாக இவரின் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலே தற்போது இந்த சோதனை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் பினாமியாக கூறப்படும் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் வீரா. சாமிநாதன் வீட்டில் நடைபெறும் இந்தச் சோதனை திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்களை கைப்பற்றுவதில் அமலாக்கத்துறை ஆர்வத்தை அதிகரித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களின் வீட்டிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகி உள்ளது.

தற்போது வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள வீரா. சாமிநாதனின் வீட்டிலும், தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்டத்து பங்களாவிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதால் வேடசந்தூர் பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தகர்க்கப்பட்ட தீண்டாமை.. செல்லங்குப்பம் மாரியம்மன் கோயிலில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.