ETV Bharat / state

திமுகவினர் விளம்பரத்தை மட்டுமே நம்பி ஆட்சி செய்கிறார்கள் - சீமான் அதிரடி

'திமுக அரசு ஒரு ஆண்டில் 8 விழுக்காடு கூட திட்டங்களை அமல்படுத்தவில்லை; விளம்பரத்தை மட்டுமே நம்பி ஆட்சி செய்கிறார்கள்' என சீமான் தெரிவித்துள்ளார்.

seeman on admk
சீமான் பேட்டி
author img

By

Published : Jun 27, 2022, 4:33 PM IST

திண்டுக்கல்: நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 'அதிகாரம் என்பது அரக்க குணம் கொண்டது. இரக்கமற்ற மனமும் உடையது. எவ்வளவு போராடினாலும் மக்கள் பிரச்னைக்குத் தீர்வு என்பது கிடையாது. போராடக்கூடிய மக்கள் அவர்களாக நொந்து பின் வாங்கும் வரை அரசு அலுவலர்கள் ஒன்றும் செய்ததாக தெரியவில்லை. திமுக அரசின் ஒரு ஆண்டு கால ஆட்சியில் 80 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றிவிட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஒரு ஆண்டு சாதனை என முழு பக்கம் விளம்பரம் மட்டுமே செய்துள்ளனர். ஆனால், எட்டு விழுக்காடு திட்டங்களைக் கூட நிறைவேற்றவில்லை. மேலும் என்னென்ன திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டு உள்ளது என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். சாதனைகள் என்பது மக்களுக்குத் தானாக தெரிய வேண்டுமே தவிர, பொதுக்கூட்டங்களை நடத்தி மேடையில் சாதனை புரிந்ததாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

'இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வேண்டும்': தமிழ்நாடு அரசு தற்போது சாதனை செய்துள்ளதாக விளம்பரங்கள் மட்டும் செய்துவிட்டு, திட்டங்கள் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது என விளம்பரத்தை நம்பி மட்டும் ஆட்சி செய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகதிகளுக்கு தமிழ்நாடு அரசால் தற்போது வீடுகள் கட்டி வருகிறார்கள். வீடுகள் கட்டித் தருவதில் மிகப்பெரிய முறைகேடு.

இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் முதலில் சிறப்பு முகாம்களை மூடவேண்டும். கியூ பிராஞ்ச் அமைப்பை தடை செய்ய வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தரவேண்டும். தமிழ்நாடு முழுவதும் கட்டடங்கள் கட்டுவதில் தமிழ்நாடு அரசு தரமான கட்டடங்களை கட்ட வேண்டும். தரமற்ற முறையில் கட்டடம் கட்டுவது பிரயோஜனம் கிடையாது.

பல இளைஞர்கள் திறமை படைத்தவர்களாக உள்ளனர். அவர்களது திறமை வெளியில் தெரியாமல் உள்ளது. மற்ற நாடுகளில் அரசு வேலைதான் தரமானதாக இருக்கும். ஆனால், இங்கு அரசு வேலைதான் தரமற்றதாக உள்ளது' எனத் தெரிவித்தார்.

பின்னர் அதிமுகவில் நிலவும் குழப்பங்கள் குறித்த கேள்விக்கு, ’அதிமுக பிரச்னையைப் பொறுத்த அளவில் அது அவர்களின் உட்கட்சிப் பிரச்னை அதில் கருத்து கூற முடியாது. அது பெரியவர்கள் பிரச்னை. அது அவர்களால் தான் பேசித் தீர்வு காண வேண்டும்' எனக் கூறினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர், 'மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை பொறுத்தவரை யானைகளை அதன் போக்கில் விடவேண்டும். யானைகள் இருக்கும் இடங்களை நாம் ஆக்கிரமிப்பு செய்தால் யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரத்தான் செய்யும். மேலும் யானைகள் வழித்தடங்களை மறித்து ரிசார்ட், காட்டேஜ் தங்கும் விடுதிகள் கட்டுவதால் தடம் மாறி யானைகள் வேறு இடத்திற்கு வருகிறது.

’அவ்வையார்’ படத்தில் ஆயிரம் யானைகளை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நிறுத்தி காட்சிகளை அமைத்தார்கள். நம் முன்னோரான ராஜராஜ சோழன் தனது படையில் 60,000 யானைகளை வைத்திருந்தார். ஆனால், தற்போது ஆயிரம் யானைகள் மட்டுமே இருப்பதாக கணக்கு சொல்லப்படுகிறது. அனைத்தும் இறந்துவிட்டது. இதற்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

சீமான் பேட்டி
மத்திய மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை 8 ஆண்டுகளில் எதைச் சாதித்தார் என்பதை அவர் சொல்ல வேண்டும். அதானியையும் அம்பானியையும் உலகப் பணக்காரர்களாக மாற்றியதைத் தவிர, அவர் வேறு எந்த ஒரு நல்லதையும் செய்யவில்லை' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இதையும் படிங்க: VIDEO: கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் முகம்... அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.