ETV Bharat / state

திமுக பிரமுகர் வெட்டிக்கொலை! - DMK cadre murdered in Dindigul

திண்டுக்கல்: முன்பகை காரணமாக திமுக பிரமுகர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திமுக பிரமுகர் வெட்டிக்கொலை!
திமுக பிரமுகர் வெட்டிக்கொலை!
author img

By

Published : Oct 23, 2020, 7:31 AM IST

திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரக்கடை அருண்குமார் (35). இவர் திமுக நகர வர்த்தகர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு (அக்.22) சுமார் 8 மணியளவில் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அருண்குமார் மீது பின்னால் வந்த கார் திடீரென மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை காரில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் நகர் தெற்கு காவலர்கள் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக, இக்கொலை நடைபெற்றுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.