திண்டுக்கல்: திமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி திண்டுக்கல் ஒன்றியத்தில் தனது தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகோட்டை பகுதி வயல்வெளிகளில் வேலை பார்த்துவந்த பெண்களையும், விவசாயிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி சிந்திக்காத அதிமுக அரசிற்கு மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்க என்ன உரிமை இருக்கிறது. ஏழை எளிய மக்கள் கரோனாவால் இறந்தார்கள். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் மக்களிடத்தில் பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கிறார்கள்.
![dmk iperiyasamy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-iperiyasamy-pressmeet-image-7204945_02122020202819_0212f_1606921099_1035.jpg)
ஆனால், அது நடக்கவே நடக்காது. ஏனெனில் தங்களுக்காக உழைக்க கூடிய கட்சி எது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
![dmk iperiyasamy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-iperiyasamy-pressmeet-image-7204945_02122020202819_0212f_1606921099_693.jpg)
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டம் பின்பற்றப்படுகிறது. ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள கட்சியினர் நேற்று ரயிலை மறிக்கிறார்கள், பேருந்தை மறிக்கிறார்கள், ரயில் மீது கல்லெறிந்தார்கள் ஆனால் அவர்கள் யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: புரெவி புயல் எதிரொலி: கொடைக்கானலில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் - சார் ஆட்சியர்