திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கொடைக்கானலில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்று கலையரங்கம். இங்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு உணவு விடுதிகள் மற்றும் பரிசுப்பொருள்கள் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கொடைக்கானலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுகவினர் சிலர், கலையரங்கம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தி விட்டு, அதற்கான பணம் தரமறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் முற்றவே அருகிலிருந்த சக கடைக்காரர்கள் வந்து பேசி சமாதனம் செய்து திமுகவினரை மீண்டும் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.