ETV Bharat / state

நல்லாசிரியர் விருது வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு

திண்டுக்கல்: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி சிறப்பாக பணிபுரிந்த 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டினார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Sep 8, 2020, 4:28 AM IST

கல்வி அறிவு பெற்ற சமூகத்தை உருவாக்கிட வேண்டுமென்ற உயர்ந்த லட்சியத்தோடு ஆசிரியர் பணியை தொடங்கி தனது அயராத உழைப்பால் நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

இந்தாண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கான விருது, பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வழங்கினார். தொடர்ந்து ஆசிரியர் தினம் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர், "எனது ஆசிரியர்கள் காட்டிய வழிகாட்டுதலின் கீழ் நான் நன்றாக படித்தால் உங்கள் முன் மாவட்ட ஆட்சியராக இருக்கிறேன். அதேபோல் ஒவ்வொரு ஆசிரியரும் அவர்களுடைய மாணவர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் உந்துகோலாக இருந்து சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

நாம் படித்த காலத்தை விட இப்போதுள்ள சூழலில் கல்வி அனைவருக்கும் கிடைக்கும் விதம் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் இதன் மூலம் மாணவர்கள் சரியான விஷயங்களை பெறும் வகையில் வழி நடத்த வேண்டும்"என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, இணை இயக்குநர் சிவக்குமார், துணை இயக்குநர் பூங்கோதை, கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்டக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.