ETV Bharat / state

சாலை விரிவாக்க பணிக்காக வேருடன் இடம் பெயர்ந்த மரங்கள்! - Trees Displaced in oddanchatram

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் - வடமதுரை சாலை விரிவாக்க பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த சில மரங்கள் வெட்டப்படாமல் வேருடன் பிடுங்கப்பட்டு வேறிடத்தில் நடப்பட்டது.

Displaced Trees
Displaced Trees
author img

By

Published : Dec 7, 2019, 12:36 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையிலிருந்து வேடசந்தூர் வழியாக ஒட்டன்சத்திரம் வரும் சாலையில் விரிவாக்க பணிகள் பல வாரங்களாக நடந்து வருகிறது. இந்த சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான புளியமரம், ஆலமரம், பாலாமரம் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. இங்குள்ள மரங்களை வேருடன் பிடுங்கி நட்டால் மறுபடியும் முளைக்கக்கூடிய மரங்களை கண்டறிந்து அவற்றை மீண்டும் நடும் பணி நடைபெற்றது.

இதனால், சாலையூர் நான்கு சாலையிலிருந்து ஒட்டன்சத்திரம் வரை உள்ள 60 மரங்களில் நான்கு மரங்கள் மட்டுமே மறுபடியும் நடக்கூடிய நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக கேதையுறும்பு அருகே சாலை விரிவாக்க பகுதியில் இருந்த பாலாமரங்களை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாலகிருஷ்ணன், திண்டுக்கல் வேளாண்மை இணை இயக்குநர் சுருளி ஆகியோர் மேற்பார்வையில் ஜே.சி.பி, கிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் வேருடன் பிடுங்கி எதிர் பகுதியில் தோண்டப்பட்டிருந்த குழியில் நடப்பட்டது.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் கூறுகையில், ஆலமரம், அரசமரம், இலுவைமரம், புங்கமரம், பாலா மரம் உள்ளிட்ட பால்வடியும் மரங்கள் மற்றும் இளம் வேம்பு மரங்களை ஒரு இடத்திலிருந்து பிடுங்கி மற்றொரு இடத்தில் நடலாம். இதில், கோமியம், சாணம் உள்ளிட்ட மூலப்பொருட்களுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

வேருடன் பிடுங்கப்பட்டு வேறிடத்தில் நடப்படும் மரம்

இத்துடன் நன்மை செய்யும் பாக்டீரியாவை கொடுக்கும் சத்து டானிக்கையும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஐந்து நாள்களுக்கு தண்ணீர் ஊற்றினால் நடப்பட்ட மரத்தின் இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைக்கும் என்றார்.

இதையும் படிங்க:

மாற்று இடத்தில் நடப்பட்ட 75 ஆண்டு பழமையான அரசமரம்!

Intro:திண்டுக்கல் 06.12.19

ஒட்டன்சத்திரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக இடம் விட்டு இடம் பெயர்ந்த மரங்கள்

Body:திண்டுக்கல் 06.12.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக இடம் விட்டு இடம் பெயர்ந்த மரங்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - வடமதுரை சாலை விரிவாக்க பணிக்காக சாலைப் பகுதியில் இருந்த சில மரங்கள் வெட்டப்படாமல் வேருடன் பிடுங்கப்பட்டு வேறிடத்தில் நடப்பட்டது. வடமதுரையிலிருந்து வேடசந்தூர் வழியாக ஒட்டன்சத்திரம் வரும் சாலையில் விரிவாக்க பணிகள் பல வாரங்களாக நடந்து வருகிறது. இந்த சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான புளியமரங்கள், ஆலமரம் மற்றும் பாலா மரங்கள் உள்ளன. இவற்றில் உள்ள மரங்களில் வேருடன் பிடுங்கி நட்டால் மறுபடியும் முளைக்கக்கூடிய மரங்களை கண்டறிந்து அவற்றை மீண்டும் நடும் பணி நடைபெற்றது. சாலையூர் நால்ரோட்டில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை உள்ள 60 மரங்களில் நான்கு மரங்கள் மட்டுமே மறுபடியும் நடக்கூடிய நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக கேதையுறும்பு அருகே சாலை விரிவாக்க பகுதியில் இருந்த பாலாமரங்களை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் திண்டுக்கல் வேளாண்மை இணை இயக்குநர் சுருளி ஆகியோர் மேற்பார்வையில் ஜே.சி.பி மற்றும் கிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் வேறுடன் பிடுங்கி எதிர் பகுதியில் தோண்டப்பட்டிருந்த குழியில் நடப்பட்டது.
மேலும் வேளாண்மை இணை இயக்குநர் கூறும்போது:-
ஆலமரம், அரசமரம், இலுவைமரம், புங்கமரம், பாலா மரம் உள்ளிட்ட பால் வடியும் மரங்கள் மற்றும் இளம் வேம்பு மரங்களை ஒரு இடத்திலிருந்து பிடுங்கி மற்றொரு இடத்தில் நடலாம். இதில் ஹோமியம் மற்றும் சாணம் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இத்துடன் நன்மை செய்யும் பாக்டீரியாவை கொடுக்கும் சத்து டானிக்கை தோண்டப்பட்ட குழியில் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 5 நாட்களுக்கு தண்ணீர் ஊற்றினால் நடப்பட்ட மரத்தின் இலைகள் உதிர்ந்து மீண்டும் முளைக்கும் என்றார்.Conclusion:திண்டுக்கல் 06.12.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக இடம் விட்டு இடம் பெயர்ந்த மரங்கள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.