ETV Bharat / state

'விவசாயியின் கண்ணீர் உறிஞ்சும் வெங்காயம்' - திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் திடீர் நோய் தாக்குதலால் அழுகி விவசாயிகளின் கண்ணீரை தாரை தாரையாக உறிஞ்சி, அவர்களை விழிபிதுங்கச் செய்துள்ளது.

5274858
5274858
author img

By

Published : Dec 5, 2019, 3:22 PM IST

தங்கம், வெள்ளி ஆபரணங்களின் விலைஉயர்வைப் போல வெங்காய விலை நாடு முழுவதும் பல்வேறு காரணங்களால் நாட்டு மக்களுக்கு விலை உயர்வு என்ற கொடுஞ்சுமையை தூக்கிக் கொடுத்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி, ஆந்திர மாநிலத்தில் அதிகபட்டசமாக நூறு கிலோ (ஒரு குவிண்டால்) வெங்காயம், 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

இப்படி வெங்காயம் விண்ணைத் தொடும் உச்ச விலையை எட்டியிருக்க, பொதுமக்களை வாட்டி வதைப்பதோடு, விவசாயிகளின் நிலையையோ கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் திடீர் நோய்த் தாக்குதலால் பாழாகி வருகிறது. வெங்காயம் அழுகி விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை உட்பட்டு தோப்புப்பட்டி என்ற பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சுருள் நோய் மற்றும் கால் பிறப்பு என்ற நோய் தாக்கப்பட்டு அறுவடைக்கு 20 நாட்கள் இருக்கும் நிலையில் திடீரென அழுகி வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நோய் தாக்குதலால் 500 ஏக்கர் வெங்காய பயிர்கள் நாசம்

வெங்காயப் பயிர்கள் காலை வேளையில் ஒரு விதமாகவும், மதிய நேரங்களில் அழுகும் நிலையிலும் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தோப்புபட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேலாக வெங்காயப்பயிர்கள் அழுகிய நிலையில் வீணாகியுள்ளதால், லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கு உரிய இழப்பீடும், விவசாயத்திற்கான காப்பீடும் வழங்கவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நிலங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். ஆனால் தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தும் கூட ஆய்வு செய்ய வராமல் அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க...

ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு!

Intro:திண்டுக்கல்

தங்கம் வெள்ளி ஆபரணங்கள் விலை உயர்வை போல் வெங்காய விலை உயர்ந்து இருக்கும் நிலையில் வேடசந்தூர் சுற்றுப் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் திடீரென நோய் தாக்கப்பட்டு அழகிய நிலையில் இருந்து வருவதால் விவசாயிகள் கண்ணீர் உரிய இழப்பீடும் விவசாயத்திற்கான காப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Body:திண்டுக்கல்.04-12-19
பதிலி செய்தியாளர் ம.பூபதி

தங்கம் வெள்ளி ஆபரணங்கள் விலை உயர்வை போல் வெங்காய விலை உயர்ந்து இருக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுப் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் திடீரென நோய் தாக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர் உரிய இழப்பீடும் விவசாயத்திற்கான காப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை உட்பட்டு தோப்புப்பட்டி என்ற பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேலாக வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது இதில் கடந்த இரண்டு நாட்களாக சுருள் நோய் மற்றும் கால் பிறப்பு என்ற நோய் தாக்கப்பட்டு அறுவடைக்கு 20 நாட்கள் இருக்கும் நிலையில் காலை நேரத்தில் நன்றாக இருக்கும் வெங்காய பயிர்கள் மதிய நேரங்களில் பார்க்கும் பொழுது அளிக்கப்போவதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர் தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்வது போல் 100 ரூபாய் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்துவரும் நிலையில் தோப்புபட்டி சுற்று பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேலாக வெங்காய பயிர்கள் அழுகிய நிலையில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர் இதற்கு மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட நிலங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கவும் காப்பீடு செய்து விவசாயிகளுக்கு முறையான காப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் கண்ணீருடன் தோட்டக்கலை துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கூட ஆய்வுக்கு வராமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

பேட்டி :1-பாலுபாரதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் _கோவிலூர்
:2- சுப்பிரமணி பாதிக்கப்பட்ட விவசாயி

Conclusion:திண்டுக்கல்.

தமிழகத்தில் தங்கம் வெள்ளி ஆபரணங்கள் விலை உயர்வை போல் தற்போது வெங்காய விலை உயர்ந்துள்ளது இந்நிலையில் வேடசந்தூர் சுற்றுப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் திடீரென நோய் தாக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்து வருவதால் விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர் உரிய இழப்பீடும் விவசாயத்திற்கான காப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.