ETV Bharat / state

சொத்துக்காக சகோதரன் கொலை.. திண்டுக்கல்லில் நடந்தது என்ன? - today latest news in tamil

Dindigul planned murder: திண்டுக்கல் அருகே சொத்துக்காகவும் கள்ளக்காதலுக்காகவும் திட்டம் தீட்டி சொந்த சகோதரனையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dindigul planned murder
சொந்த சகோதரனையே கொலை செய்த கொடூரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 6:14 PM IST

திண்டுக்கல்: நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்டமலைபட்டியைச் சேர்ந்தவர் பழனி இவருக்கு வெள்ளையம்மாள், அடைக்கம்மாள் என்ற இரண்டு மனைவிகள். முதல் மனைவி வெள்ளையம்மாளுக்கு சின்னக்கரந்தி, முத்தம்மாள் என்ற இரண்டு மகள்களும், 2-வது மனைவிக்கு அம்மணி என்ற மகளும், ராமன் என்ற மகனும் உள்ளனர்.

பழனி மற்றும் அவரது இரண்டு மனைவிகளும் இறந்து விட்டனர். மூத்த மகளான சின்னக்கரந்தி (28) என்பவர் நத்தம் ஆவிச்சிபட்டியை சேர்ந்த ஜெயராஜ் மகன் குணசேகரன் (37) என்பவரை காதல் கலப்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மனைவியின் மகள் அம்மணி (26) என்பவரை திண்டுக்கல் அருகே சிறுமலையில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

கணவரை விட்டுப் பிரிந்தவர் மொட்டமலைபட்டியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்து தம்பி ராமனுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பரான எர்ரம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பவர் ராமன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது கார்த்திக்கு அம்மணியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ராமன் அவரது சகோதரியையும் நண்பனையும் கண்டித்து சகோதரியிடமிருந்த செல்போனை பிடுங்கி இவர்களது பெரியப்பாவான பழனிச்சாமி என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனால் அம்மணி-கார்த்தி இருவரும் சந்திக்க முடியாத சூழல் உருவானது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த உறவை அறிந்த சின்னகரந்தி கணவர் குணசேகரன் அம்மணியை அடைவதற்கு பல முறை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதை அம்மணி அவரது சகோதரியான சின்னகரந்தியிடமும் தம்பி ராமனிடமும் சொல்லியுள்ளார்.

இதனால் ராமனுக்கும் குணசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே சொத்து பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. சொத்து முழுவதும் ராமனின் பாட்டி பெயரில் இருந்ததால் பாகப்பிரிவினை செய்வதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் சொத்து பிரிப்பதில் சிக்கல் நீடித்து வந்துள்ளது. இதனால் ராமனுக்கும் குணசேகரனுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது.

கள்ளக்காதலை கண்டித்ததால் ராமனுக்கும் கார்த்திக்கும், சொத்து பிரச்சனையால் குணசேகரனுக்கு ராமனுக்கும் பகை நீடித்து வந்துள்ளது. இதனால் குணசேகரனும் கார்த்திக்கும் சேர்ந்து கடந்த 8ஆம் தேதி காலை இருவரும் ராமனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அதை தனது மனைவி சின்னகரந்தியிடமும், கார்த்திக்கின் காதலி அம்மணியிடமும் கூறியுள்ளனர்.

இதை அன்று இரவே செயல்படுத்த முடிவு செய்த நான்கு பேரும், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராமனை குணசேகரன் மண்வெட்டி கைப்பிடியால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து அருகில் இருந்த கிணற்று மேட்டுக்கு நான்கு பேரும் ராமனின் உடலை தூக்கிச்சென்று, அங்கு ராமனின் இடுப்பில் பெரிய கருங்கல்லை கட்டி கிணற்றுக்குள் தூக்கி வீசியுள்ளனர். மறுநாள் ராமனை காணவில்லை என ஊர் முழுவதும் சொல்லியுள்ளனர்.

இதனை அடுத்து ராமனின் நண்பர்கள் நண்பனை காணவில்லை என சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு வந்தனர். பின்னர் மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் அவரைத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (செப் 12) காலையில் கிணற்றில் வீசிய ராமனின் உடல் மிதக்க ஆரம்பித்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினரும் கொலையாளிகளும் கிணற்றில் ராமனின் உடல் மிதப்பதாக நத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த நத்தம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் இறந்தவரின் உடலை மீட்டனர்.

உடர்கூறு பரிசோதனைக்காக ராமனின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராமனின் இறப்பில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தினர். அதன் ஒருபகுதியாக ராமன் இறப்பதற்கு முன்பு அவரது அலைபேசிக்கு வந்த அழைப்புகளை பரிசோதனை செய்ய தொடங்கினர் அப்போது கார்த்தி 10 முறைக்கு மேல் அழைப்பு விடுத்தது தெரியவந்தது.

இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கார்த்திக்கை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் பல உண்மைகள் வெளியே வந்தது. சொத்துக்காகவும் கள்ளக்காதலுக்காகவும் நால்வரும் கூட்டுச் சேர்ந்து சொந்த சகோதரனையே திட்டம் தீட்டி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகள் நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சொந்த சகோதரனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Actor vijay: நீண்ட நாட்களுக்கு பின் பெற்றோரை சந்தித்த நடிகர் விஜய் - புகைப்படம் வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.