திண்டுக்கல் : ஆத்தூர் அருகே தருமத்துப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதால் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பழனி மதுவிலக்குப் காவல் துறையினருக்கு கள்ளச்சாராயம் விற்பனை பற்றி ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து சென்றனர்.
ஜூஸ் பாட்டிலில் சாராயம் விற்பனை
அப்போது முத்துசாமி மகன் அன்ன ராஜா என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் ஜூஸ் பாட்டிலில் 200 மில்லி அளவு சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.
உடனடியாக அன்ன ராஜா என்பவரை பழனி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர். அவர் வைத்திருந்த 50 பாட்டில் சாராயம், சாராயம் விற்பனை செய்ய வைத்து இருந்த உபகரணங்களை பறிமுதல் செய்த காவல் துறையின இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி - இளைஞர்கள் போஸ்டர்