தமிழ்நாடு அரசு கரோனோ வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது, அதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து அவர், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரோனோ பரவல் தடுப்பு விழிப்புணர்வு முகாமினை தொடங்கிவைத்தார். அதன்பின் அவர் தீவிர காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனையில் ஆய்வுமேற்கொண்டார். மேலும் மருத்துவர்களிடம் சிகிச்சைகள் பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு