திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மனு கொடுப்பதற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருவதைத் தவிர்க்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாளுக்கு நாள் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படியான சூழலில் பொதுமக்களின் நலன் கருதி யாரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மனு அளிக்க வேண்டாம். குறைகள் தெரிவிக்க வேண்டுமெனில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் வாட்ஸ் அப் எண் 94875 93100 என்ற மொபைல் எண்ணிற்கும் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியின் மூலமும் தெரிவிக்கலாம். இது மட்டுமின்றி spdgipetitioncell@gmail.com என்ற முகவரியிலும் குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும் அந்தந்த பகுதி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து உரிய பாதுகாப்புடன் சென்று மனு அளிக்கலாம்.கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நேரத்தில் மேற்கொண்ட வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து சமூகப் பொறுப்பற்ற வேண்டும். எனவே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வருவதை பொதுமக்கள் தவிர்த்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கரோனா எதிரொலி: கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு!