ETV Bharat / state

கொடைக்கானல் கோடை விழா ஊரடங்கால் ரத்து!

திண்டுக்கல்: ஊரடங்கு உத்தரவு காரணமாக புகழ் மிக்க கொடைக்கான‌ல் கோடை விழா ர‌த்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

kodaifest
kodaifest
author img

By

Published : May 2, 2020, 11:40 AM IST

'ம‌லைக‌ளின் இள‌வ‌ர‌சி' என்ற‌ழைக்க‌ப்ப‌டும் கொடைக்கான‌ல் சுற்றுலா த‌ல‌த்தற்கு, த‌மிழ‌்நாடு ம‌ட்டுமின்றி ப‌ல்வேறு வெளி மாநில‌ங்க‌ளிலிருந்து ஆண்டுதோறும் 8 முத‌ல் 10 ல‌ட்ச‌ம் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ருகை த‌ருவ‌ர். பள்ளிகள் விடுமுறை என்பதால் எப்போதும் ஏப்ரல்,மே மாதங்களில் மக்கள் அதிகளவில் வருவார்கள்.

குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் சீசனை நம்பித்தான் அப்பகுதி மக்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மே மாதத்தில் 10 நாள்க‌ள் ந‌டைபெறும் கோடை விழாவில், சுற்றுலாத் துறை, தோட்ட‌க் க‌லைத் துறை, கால்ந‌டை ப‌ராம‌ரிப்பு துறை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு துறை சார்பில் பார‌ம்ப‌ரிய‌ நிக‌ழ்ச்சிக‌ள், ந‌ட‌னங்க‌ள் ந‌டைபெறும்.

புகழ்பெற்ற கொடைக்கானல் கோடை விழா ரத்து

பிரைய‌ண்ட் பூங்காவில் ந‌டைபெறும் க‌ண்காட்சியில் ரோஜா, டேலியா, பிங்க் ஆஸ்ட‌ர், சால்வியா உள்ளிட்ட‌ 1000த்திற்கும் மேற்ப‌ட்ட‌ வ‌கையிலான‌ ப‌ல‌ ல‌ட்ச‌ம் பூக்க‌ள் க‌ண்ணை விய‌க்கும் வ‌ண்ண‌த்தில் அமைந்திருக்கும்.

மேலும், ந‌ட்ச‌த்திர‌ ஏரியில் த‌னியார் , அர‌சு துறைக‌ள் இணைந்து ந‌ட‌த்தும் ப‌ட‌கு போட்டி, வாத்து பிடிக்கும் போட்டி, கால்ப‌ந்து , கைப‌ந்து , ஹாக்கி உள்ளிட்ட‌ விளையாட்டு போட்டிக‌ளும் வெகு சிற‌ப்பாக‌ ந‌டைபெறும்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் கோடை விழா ர‌த்து செய்யப‌ட்ட‌தாக மாவ‌ட்ட‌ ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதனால், விழாவை மட்டுமே ந‌ம்பி பிழைப்பு ந‌ட‌ந்தி வ‌ந்த‌ கொடைக்கான‌ல் வாசிக‌ளுக்கு பெரும் ஏமாற்ற‌ம் ஏற்பட்டுள்ள‌து.

இதையும் படிங்க: முதியோர் இல்லத்தில் மூதாட்டிக்கு கரோனா தொற்று

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.