திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கொங்கு நகரில் கடந்த ஏழு வருடங்களாக மரக்கடை நடத்தி வருபவர் சிவகுமார். இவரது, கடையில் முருகேசன் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை செய்துள்ளார். அப்போது அவருக்கு கைவிரலில் அடிபட்டது. அதற்கான மருத்துவச் செலவை சிவகுமார் செய்துள்ளார்.
அதன்பிறகு முருகேசன் வேறு வேலைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், தன் விரலில் அடிபட்டதற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என முருகேசன் சிவகுமாரை மிரட்டி வந்துள்ளார். பணம் கொடுக்க சிவகுமார் மறுக்க, முருகேசன் தனது நண்பர் ராஜா உதவியுடன் கடந்த 6ஆம் தேதி மரக்கடைக்கு தீ வைத்துள்ளார்.
இதில், கடையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மரக்கடைக்கு அருகேயுள்ள விடுதியின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது முருகேசன், ராஜா இணைந்து கடைக்குத் தீ வைத்தது உறுதியானது. தற்போது, இருவரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: லாரி முன் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை - வெளியான சிசிடிவி வீடியோ