ETV Bharat / state

திண்டுகல்லில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுகவினர் அமளி! - Vote Counting Center is an affair

திண்டுக்கல்: திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்ளே நுழைந்ததாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Vote Counting Center Problems
Vote Counting Center Problems
author img

By

Published : Jan 2, 2020, 7:11 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் மாநிலம் முழுவதும் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.வி.எம் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது, திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்ளே சென்று அலுவலர்களிடம் பேசியதாகவும், அங்கிருந்த வாக்குச் சீட்டை எடுத்துச் சென்றதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.

வாக்கு எண்ணிக்கை மையம்

மேலும், உடனடியாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்யும்படி வலியுறுத்தினர். இதனால், சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர் மற்ற கட்சியினர் வாக்கு எண்ணிக்கையை தொடர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையம் பரபரப்பாகக் காணப்பட்டது.

இதையும் படிங்க: முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசியல் ஆளுமை விருது!

Intro:திண்டுக்கல் 2.2.2020

திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நுழைந்ததாக கூறிய அதிமுகவினர் அமளி

Body:திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் இன்று திண்டுக்கல் மாவட்டத்தின் 13 இடங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் எம்.வி.எம் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒன்றிய செயலாளருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்ளே சென்று அதிகாரியிடம் பேசியதாகவும், அங்கிருந்த வாக்குச் சீட்டை எடுத்து சென்றதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டினார்.

மேலும் உடனடியாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்யும்படி வலியுறுத்தினர். இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர் மற்ற கட்சியினர் வாக்கு எண்ணிக்கையை தொடர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையம் பரபரப்பாக காணப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.