ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலான நாள்களை, தமிழ் ஆட்சி மொழி செயலாக்க வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு நேற்று (சனிக்கிழமை) திண்டுக்கல் மாநகராட்சி முன்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது கைகளில் வணிக நிறுவனங்களின் விளம்பர பலகைகள் அனைத்தும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நான்கு ரத வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், நகர்நல அலுவலர் டாக்டர் அனிதா, அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள், மாவட்ட தமிழ்த் துறையைச் சேர்ந்த அலுவலர்கள், கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கழிப்பறைகளை இனி மாணவர்கள் சுத்தம்செய்ய மாட்டார்கள் - செங்கோட்டையன் திட்டவட்டம்