ETV Bharat / state

புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு: சீறிய காளைகளை தழுவிய வீரர்கள் - திண்டுக்கல் ஜல்லிக்கட்டு போட்டி 2022

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

புகையிலைபட்டி ஜல்லிக்கட்டு போட்டி
புகையிலைபட்டி ஜல்லிக்கட்டு போட்டி
author img

By

Published : Apr 6, 2022, 10:08 PM IST

திண்டுக்கல்: புகையிலைப்பட்டி புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 6) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சந்தன மேரி கீதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திண்டுக்கல் மாவட்டம், சுற்று வட்டார ஊர்களிலிருந்து 500 காளைகள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து வெளியேறி சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தழுவினர்.

சிறப்பாக விளையாடிய காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், வெள்ளிக்காசு, ரொக்கப்பணம் போன்ற பல்வேறு பரிசு பொருட்கள் விழா கமிட்டியின் சார்பாக வழங்கப்பட்டன.

புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி

மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

போட்டி வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு உற்சாகத்துடன் கும்பாபிஷேகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.