திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் முக்கிய பகுதிகளான அண்ணாசாலை, முஞ்சிக்கல், கேசிஎஸ் திடல், உள்ளிட்ட பகுதிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாகும்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் கொடைக்கானல் சாலைகள் தற்போது கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக போக்குவரத்து அதிகம் இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று வனப்பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமை குட்டிகள் இந்த சாலைகளில் வலம் வந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் நகர்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். கோடை காலம் தொடங்கியதில் இருந்து மலைப்பகுதிகளில் உள்ள விலங்குகள் உணவு தேடி ஊர்களுக்குள் புகுந்து சாலைகளில் வலம் வருவது வழக்கமாகி உள்ளது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள்: திண்டுக்கல்லில் திமுகவினர் கொண்டாட்டம்