கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்ட புதிய ஆட்சியராக விசாகனை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இவர் மூன்று ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி ஆணையராகப் பணிபுரிந்துவந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 17) அரசு உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டத்தின் 27ஆவது ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
![திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ். விசாகன்.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12164583_collector.jpg)
இவர் பி.இ., எம்.பி.ஏ. ஆகிய பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். தூத்துக்குடி, தர்மபுரி, புதுக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருவாய்த் துறையில் பணியாற்றியுள்ளார்.
மதுரையில் மத்திய அரசின் சீர்மிகு நகரம், வைகை இரண்டாவது கூட்டுக் குடிநீர், மதுரை நகர வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் கரோனா நிவாரணத் தொகை இரண்டாம் தவணை ரூ. 2000 வழங்கிய எம்.எல்.ஏ.