தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளால் ஏராளமானோர் உணவின்றி தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள பெத்தநாயக்கன் பட்டியில் வசித்து வரும் 500க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் உணவின்றி தவிப்பதாக திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமிக்குத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில், தன்னார்வலர்கள் மூலம் சுமார் 500 சாப்பாடு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு உணவின்றி தவித்தவர்களுக்கு திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி வழங்கினார். இவரின் இந்த செயலைப் பலரும் பாராட்டிவருகினறனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி மையத்தில் ஆன்லைன் பதிவு செய்ய அனுமதி!