திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். சுற்றுலாப் பயணிகளை நம்பியே இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.
இந்நிலையில், கரோனா தாக்குதலின் காரணமாக இங்குள்ள மக்கள் அனைவரும் வருமானத்தை இழந்து தவித்துவருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.
அதன் ஒருகட்டமாக, கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது தூய்மைப் பணியாளர்கள், கூலித் தொழிலாளிகள், வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், கடை வைத்திருப்பவர்கள் என சுமார் 1200 தினக்கூலி தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி நிவாரணப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க:வெளிமாநில லாரி ஓட்டுநர்களுக்கு இலவசமாக உணவு!