தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் உள்ளடக்கியது. ஊரடங்கு தளர்வு அறிவித்த பின் போக்குவரத்து தொடங்கியபோது, திண்டுக்கல் மண்டலத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் பகுதிகளுக்குச் சென்றுவந்தது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இன்றுமுதல் வரும் ஜூன் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் மண்டலத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள், மதுரை எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
அதன்படி திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொடை ரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் வாடிப்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல தேனி மாவட்ட பகுதிகளிலிருந்து நிலக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் செக்கானூரணி வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நத்தம் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் கடவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பொதுமக்கள் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டாம் - காவல் கண்காணிப்பாளர்