திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமைவகித்தார்.
அதில் அவர் பேசும்போது, ”விக்கிரவாண்டியாக இருந்தாலும் வாங்குரவாண்டியாக இருந்தாலும் பரவாயில்லை, எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதிமுகவை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது இது மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு.
நாட்டை ஆளுகின்ற தகுதி எங்களுக்கு இருக்கின்றது. உங்களுக்கு இல்லை. கருணாநிதி உயிர்போகும்வரை ஸ்டாலின் இந்த கட்சிக்கு தலைவர் என்று சொல்லவே இல்லை. ஸ்டாலின் ஏன் உதயநிதியை உருவாக்கினார்கள், அந்தக் கட்சியில் ஆளே இல்லையா, கருணாநிதி மகன்தான் இளைஞரணிக்கு வரவேண்டுமா, கருணாநிதி மகள்தான் மகளிர் அணிக்கு தலைவியாக வரவேண்டுமா, கருணாநிதி மகன் என்பதைவிட என்ன தகுதி இருக்கிறது ஸ்டாலினுக்கு.
சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதியை பார்த்தீர்களா, எந்த அமித் ஷாவை கைது செய்தார்களோ, நரேந்திர மோடி மீது பொய்க்குற்றச்சாட்டு சொல்லி கேவலப்படுத்தினார்களோ அதே கடவுள் இன்றைக்கு சிதம்பரத்திற்கு ஒரு கதியை கொடுத்துள்ளது. அதேபோல் ஸ்டாலினுக்கும் ஒரு சூழ்நிலை வரும்” எனப் பேசினார்.