திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை காரணமாக, கடந்த 2 மாதங்களாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்கள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கரோனா தொற்று குறைந்துவருவதால், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் திங்கள்கிழமை (ஜூலை 5) முதல் பழனி மலைக்கோயிலில், சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதில் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும் சாமி தரிசனத்திற்கு www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையத்தின் மூலம் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையு படிங்க: தமிழ்நாட்டில் மலர்ந்த நான்கு தாமரைகள் பிரதமருடன் சந்திப்பு!