திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலின் தைப்பூசத் திருவிழா ஜனவரி 12ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக ஜனவரி 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக 10 நாள்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் எந்த ஒரு நிகழ்வுக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (ஜன.18) தைப்பூச திருவிழாவையொட்டி கிரிவலப்பாதையில் குவிந்த பக்தர்கள், கைகளில் சூடம் ஏற்றி சூரிய நமஸ்காரம் செய்து முருகனை வழிபட்டனர்.
முருகனின் திருக்கல்யாணம், வெள்ளி மயில் வாகன தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நேற்றிரவு (ஜன.18) பக்தர்களுக்கு அனுமதியின்றி நடைபெற்றன.
மேலும் இன்று (ஜன.18) மாலை பக்தர்களின்றி நடைபெறவுள்ள தைப்பூசத் திருத்தேரோட்டத்தில், 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: HOROSCOPE: இன்று தைப்பூசம் - உங்க ராசிக்கு எப்படி?