திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வந்தது. இன்று (நவ.13) காலை முதலே நகரின் பல்வேறு இடங்களில் அடர்ந்த பனி மூட்டமானது நிலவியது.
![அடர் பனி மூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-kodaikanal-mist-problem-vs-spt-tn10030_13112021134034_1311f_1636791034_504.png)
ஏரிச்சாலை, கலையரங்கம் பகுதி, அப்சர்வேட்டரி, பாம்பார்புரம் சாலை, அண்ணாசாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடர் பனி மூட்டத்தின் காரணமாக சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.
![அடர் பனி மூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-kodaikanal-mist-problem-vs-spt-tn10030_13112021134034_1311f_1636791034_127.png)
மேலும் எதிரே வரும் வாகனம் கூட பனி மூட்டத்தின் காரணமாக தெரியாமல் அவதிக்குள்ளாகினர். கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் பனி மூட்டத்தின் காரணமாக தற்காலிகமாக படகு சவாரியும் நிறுத்தப்பட்டது . சில இடங்களில் தற்போது மிதமான மழையும் பெய்து வருகிறது.
இதையும் படிங்க:Manipur terror attack: மணிப்பூரில் ராணுவ கான்வாய் மீது பயங்கரவாத தாக்குதல்