திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி என்னும் மலை கிராமம் உள்ளது. இந்த பகுதியினர் பெரும்பாலும் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக இரண்டு இடங்களில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், இப்பணிகள் காலதாமதமாக நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், சாலைகள் முழுவதும் கற்கள் மற்றும் மணல் கொட்டி வருவதால் சாலை குறுகி வருகிறது. மேலும் விவசாயப் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியாமல் விவசாயிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
பகல், இரவு நேரங்களில் அப்பகுதியின் வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும் பெரும் இடையூறு அடைவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, வில்பட்டி பிரதான சாலையில் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: இடுக்கி மாவட்டத்தில் தொடர் கனமழை - 5 பேர் உயிரிழப்பு