ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததையடுத்து, காலை 4 மணியளவில் பல்வேறு மாவட்டங்களில் திரைப்படம் வெளியானது. ஆனால், திண்டுக்கல் நகர் பகுதிகளில் மட்டும் தற்போது வரை தர்பார் திரைப்படம் திரையிடப்படவில்லை.
திண்டுக்கல் ரவுண்டு சாலையில் உள்ள திரையரங்கில் தர்பார் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ட்விட்டர் வாயிலாக தர்பார் திரையிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்தது. இருப்பினும் இன்று காலை படம் திரையிடப்படும் என காத்திருந்த ரஜினி ரசிகர்கள், ஆத்திரமடைந்து திரையரங்கு அருகே இருந்த பேனர்களை கிழித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'தர்பார்' வெளியீட்டுக்கு 1,370 இணையதளங்களுக்கு தடை - சென்னை உயர் நீதிமன்றம்