திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தவசிமடை என்னும் கிராமம் உள்ளது. இக்கிராமம் சிறுமலை வனப்பகுதி அடிவாரத்தில் உள்ளது.
இக்கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து வனத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை ஒருங்கிணைந்து சிறுமலை, தவசிமடை கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் தாங்கள் மறைத்து வைத்திருக்கும் கள்ளத் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு விழிப்புணர்வு பரப்புரை கூட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 6) மதியம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள நாகம்மாள் கோயில் ஓடையில் 10 நாட்டுத் துப்பாக்கிகள், ஒரு தோட்டா உள்ளிட்டவை அனாதையாக கிடப்பதாக சாணார்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், வனத்துறையினர் துப்பாக்கிகளை கைப்பற்றினர்.
மேலும் துப்பாக்கிகளை மொத்தமாக போட்டுவிட்டு சென்றது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேட்பாரற்று கிடந்த நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் - நாட்டுத் துப்பாக்கிகள்
திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே கேட்பாராற்று கிடந்த 10 நாட்டுத் துப்பாக்கிகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.