திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு மக்களுக்கு மக்களவை உறுப்பினராக மட்டுமல்லாமல், உங்கள் மகளாக சகோதரியாக இருகரம் கூப்பிக் கேட்கிறேன்.
தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். தற்போது நாடு அபாய நிலையை தாண்டவில்லை. ஆகையால் அனைவரும் தனித்திருக்க வேண்டும். கரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை விரைவாக கண்டறிய கேரளா உள்ளிட்ட பல மாநில அரசுகள் நவீன கருவிகளை வாங்கியுள்ளது.
அதைக் கொண்டு விரைவாக வைரஸ் தொற்றைக் கண்டறிந்துவருகின்றனர். இதுபோன்று தமிழ் மக்களின் உயிர்களை காக்க நவீன கருவிகளை வாங்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். இவற்றை விரைவாக வாங்கி மக்களை பிணி தொற்றாமல் காப்பாற்ற வேண்டும்.
நவீன கருவிகளைக் வாங்குவதற்கு பணம் இல்லையெனில், பிச்சை எடுத்தாவது தமிழ்நாடு அரசுக்கு தருவதாகக் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...கரோனாவால் மூடப்பட்ட வங்கி...!