திண்டுக்கல்: கொடைக்கானலில் ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப்பட்ட நாள் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
திறந்தவெளி சுற்றுலா இடங்களை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் காணமுடியும்
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திறந்தவெளி சுற்றுலா இடங்களை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
கரோனா மூன்றாம் அலை பரவி வரும் சூழலில், முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் சுகாதாரத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பிரதான சாலைகளில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆடி பெருக்கு திருவிழா கொண்டாட்டத்திற்கு தடை