திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 153 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது திண்டுக்கல்லில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 946ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கரோனா தடுப்புப் பணியில் முக்கியப் பங்காற்றிவரும் தூய்மைக் காவலர்களுக்கு சுகாதாரத் துறை மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, அலுவலகத்திலுள்ள அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து இன்று பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட அலுவலர்கள் 29 பேருக்கும், தூய்மைக் காவலர்கள் 40 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா பிரிவில் போதிய வசதிகள் இல்லை! பரவும் காணொலி...