திண்டுக்கல்: ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர். இதனால் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
கரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இந்தநிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் சுகாதாரத் துறையினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விதிமுறைகளை மீறும் சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடும்பத்துடன் சுற்றுலா அனுப்புவதாக கூறி ஒரு லட்சத்து 30 ஆயிரம் மோசடி!