திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த அதிக மக்கள் இங்கு வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளதால் இன்று முதல் கொடைக்கானல் நகரின் நுழைவாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகேயுள்ள நகராட்சி சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தி, ஸ்கேனர் மூலம் சோதித்த பின்னரே சுற்றுலாப் பயணிகள் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொடைக்கானலுக்கு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். ஆனால், தற்போது இங்கு வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு கரோனா வைரஸ் இல்லை என்று மருத்துவச் சான்று வழங்கிய பிறகே தங்கும் அறைகள் ஒதுக்கப்படும் என்று விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மஸ்கட் நாட்டில் இருந்து சென்னை வந்த பயணிகளுக்கு கரோனா வைரஸ் அறிகுறி!