நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுத் தரப்பில் மக்கள் கூடும் இடங்களில் மருந்துகளைத் தெளித்துவருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாகத் திண்டுக்கல் நகரில் உள்ள சிலுவத்தூர் சாலை மழைநீர் சேகரிப்பு, நடைபயிற்சி மையத்தில் உள்ள குளத்தில் மருந்து தெளிக்கப்பட்டது. இதனையடுத்து குளத்திலிருந்த மீன்கள் அதிகாலையிலிருந்து செத்து மிதக்கத் தொடங்கின. மேலும், இறந்த மீன்களை குளத்தில் வசிக்கக்கூடிய முக்குளிப்பான் நாரை போன்றவை கூட சாப்பிடாமல் இருந்ததைப் பார்க்க முடிந்தது.
மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்களின் அலட்சியப்போக்கு காரணமாக, அல்லது மருந்து தாக்கம் காரணமாக பல மீன்கள் இறந்துள்ளன. இதனால் இங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் இதனைக் குறித்து கண்டித்தனர். மேலும், மீன்களை அப்புறப்படுத்திவிட்டு குளத்தில் மருந்து தெளிக்கலாம் அல்லது நீங்கள் பாதுகாக்க வேறு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று கூறினர்.
இதையும் படிங்க: கரோனா: அபாயக்கட்டத்தை நெருங்கும் இந்தியா!