தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் - பூங்கொடி தம்பதியினர். இவர்களது மகன் சுரேஷ் (19). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த போதுலட்சுமி (60) என்ற பெண்ணிற்கும் கடந்த ஓராண்டுக்கு மேலாக திருமண பந்தத்தை மீறிய உறவு இருந்துவந்துள்ளது.
இதனை அறிந்த சுரேஷின் பெற்றோர், அவரைக் கண்டித்துள்ளனர். அதன் பின்னரும் சுரேஷ், அந்தப் பெண்ணிடம் பெற்றோருக்குத் தெரியாமல் மறைமுகமாகத் தொடர்புவைத்திருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி போதுலட்சுமியின் வீட்டின் அருகே, சுரேஷ் அடையாளம் தெரியாத வகையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனால் தனது மகன் இறப்புக்கு போதுலட்சுமிதான் காரணம் எனப் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், சுரேஷின் பெற்றோர் நேற்று (ஜூன் 28) தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மனுவில், ”என் மகனுடன் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு வைத்திருந்த பாட்டி முறையாகும் போதுலட்சுமி, என் மகனை ஏமாற்றி நகை, பணம் பறித்துள்ளார். இந்நிலையில் எனது மகன் அடையாளம் தெரியாத வகையில் உயிரிழந்துள்ளார்.
எனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது. இதற்கு காரணமான போதுலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் பெண் உள்பட மூவர் மீது அமில வீச்சு